Friday, August 9, 2013

சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள் Part 3

வறுமை நீங்கி வளமுடன் வாழ மகா கணேசாஷ்டகம்

கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள், நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.

அமைதியான வாழ்வு பெற ஸ்ரீராம ஸ்தோத்திரம்

இச்சுலோகத்தை நாள்தோறும் பத்து முறை கூறி பாராயணம் செய்தால் தோஷங்கள் விலகி நிம்மதியான வாழ்வு பெறலாம். மன நிம்மதி, குடும்ப அமைதி ஆகியவைகள் கிட்டும்.

ஆபாதாம் பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானா மார்த்தி பீதானாம் பீதி நாசனம்
த் விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீசாப பாண தரோயுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ?மண
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாயாபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய: பதயே நம
அக்ரத: ப்ருஷ்ட தச்சைவ பார்ச் வதஸ்ந மஹாபலௌ
ஆகர்ண பூர்ணதன்வானௌ ரக்ஷதாம் ராமலக்ஷ்மணௌ

வேண்டியதைப் பெற அபிராமி ஸ்லோகம்

திருக்கடவூரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மையைப் போற்றினால் நாம் வேண்டியதை அருள்வாள். அபிராமி தேவி மீது அபிராமிப் பட்டர் பாடிய அந்தாதி
மந்திர சக்தி வாய்ந்தது.
வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்து புகுந்து
இருந்தான் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே

பாற்கடலிலே தோன்றிய அமிழ்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிட காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத்தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டோ?

பிரிந்தவர் ஒன்றுசேர சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரம்

ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான் கணவனைப் பிரிந்த சீதையை ராமரிடம் கொண்டு சேர்க்க அரும்பாடு பட்டார். அவரைத் துதித்தால் கணவன்-மனைவி கருத்து வேற்றுமை நீங்கி, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரத்தை தினசரி விடியற்காலையில் ஆஞ்சநேய சுவாமியின் முன் அமர்ந்து பாராயணம் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.

ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்
பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்
பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

பஜே லக்ஷ?மணப்ராண ரஹாதிதக்ஷம்
பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்
லக்ஷ?மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

க்ருதா பீலநாதம் சிதிஷிப்த பாதம்
சநக்ராந்த ப்ருங்கம் கடிஸ்தோரு ஜங்கம்
யத்வ்யாப்வ கேஸம் புஜா ஸ்ரோஷி தாசம்
ஜய ஸமேதம் பஜே ராமதூதம்
சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்
ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே
போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
ரண÷க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்
பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய
ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:
பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:
பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம
ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
நீரதாரணரூட காட ப்ரதாபி
பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!
குருவே ஸ்ரீஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே
ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்
சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்
நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

ஹநூமத் புஜங்க ப்ரயாதம் ப்ரபாதே
ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய
படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால: நமஸ்
ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

சரஸ்வதி துவாதச நாம ஸ்தோத்ரம்

ஸரஸ்வதீ த்வியம் த்ருஷ்டா வீணா புஸ்தக தாரிணி
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தானகரீ மம
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயஞ் ச ஸரஸ்வதீ
த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீ
பஞ்சமம் ஜகதீக்யாதா ஷஷ்ட்டம் வாணீச்வரீ ததா
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் பரம்ஹசாரிணீ
நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ
ஏகாதசம் க்ஷúத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீ
ப்ராஹ்ம்யா: த்வாதச ;நாமானி த்ரிஸந்த்யம் ய: படேன் நர:
ஸர்வ ஸித்திகரீ தஸ்ய ப்ரஸன்னா பரமேச்வரீ
ஸாமே வஸது ஜிக்வாக்ரே பிரஹ்ம ரூபா சரஸ்வதீ

சரஸ்வதி அஷ்ட மந்திரங்கள்

இம்மந்திரத்தை 4 லட்சம் முறை ஜெபித்தால் பிருகஸ்பதிக்கு சமமாகலாம். இது நாராயணன் வால்மீகிக்கும், பிருகு சுக்கிரருக்கும், மரீசி பிருஹஸ்பதிக்கும்  விபாண்டகர் ரிஷ்யசிருங்கருக்கும், சூரியன் யாக்ஞவல்கியருக்கும் உபதேசித்தனர். சரஸ்வதி அந்தந்த அவயங்களைக் காக்கட்டும் என்பது இந்த அஷ்ட மந்திரங்களின் பொருள்.
ஓம் ஸ்ரீம் ஹரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹா
ஸிரோமே பாது ஸர்வத:
ஓம் ஸ்ரீம் வாக்தேவதாயை ஸ்வாஹா
பாலம் மே ஸர்வ தோவது
ஓம் ஸ்ரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹேதி
ஸ்ரோத்ரே பாது நிரந்தரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பகவத்யை ஸரஸ்வத்யை
ஸ்வாஹேதி ஸ்ரோத்ர யுக்மம் ஸதாவது
ஐம் ஹ்ரீம் வாக்வாதின்யை ஸ்வாஹா
நாஸாம் மே ஸர்வ தாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதிஷ்டாத்ரு தேவ்யை
ஸ்வாஹா சோஷ்டம் ஸதாவது
ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் ப்ராம்யை ஸ்வாஹேதி
தந்த பங்க்திம் ஸதாவது
ஐம் இத்யேகாக்ஷரோ மந்த்ரோ மம கண்டம்
ஸதாவது
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் பாதுமே க்ரீவாம்
ஸ்கந்தௌ மே ஸ்ரீம் ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யா திஷ்டாத்ரு தேவ்யை
ஸ்வாஹா வக்ஷ: ஸதாவது
ஓம் ஹ்ரீம் வித்யாதி ஸ்வரூபாயை ஸ்வாஹா
மே பாது நாபிகாம்
ஓம் ஹ்ரீம் க்லீம் வாண்யை ஸ்வாஹேதி
மம ஹஸ்தௌ ஸதாவது
ஓம் ஸர்வ வர்ணாத்மி காயை பாத யுக்மம்
ஸதாவது
ஓம் வாக் அதிஷ்டாத்ரு தேவ்யை ஸ்வாஹா
ஸர்வம் ஸதாவது
ஓம் ஸர்வ கண்டவாஸின்யை ஸ்வாஹா
ப்ராச்யாம் ஸதாவது
ஓம் ஸர்வ ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
க்நிதிஸி ரக்ஷது
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸரஸ்வத்யை
புத ஜநன்யை ஸ்வாஹா
ஸததம் மந்த்ர ராஜோயம் தக்ஷ?ணே மாம்
ஸதாவது
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் த்ரயக்ஷரோ மந்த்ரோ
நைருரித்யாம் ஸதாவது
ஓம் ஐம் ஜிஹ்வாக்ர வாஸின்யை ஸ்வாஹா
மாம் வாருணேவது
ஓம் ஸர்வாம்பிகாயை ஸ்வாஹழ வாயவ்யேமாம்
ஸதாவது
ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் கத்யாவாஸின்யை ஸ்வாஹா
மாம் உத்தரேவது
ஓம் ஐம் ஸர்வ ஸாஸ்த்ர வாஸின்யை ஸ்வாஹா
ஈஸான்யம் ஸதாவது
ஓம் ஹ்ரீம் ஸர்வ பூஜிதாயை ஸ்வாஹா
சோர்த்வம் ஸதாவது
ஹ்ரீம் புஸ்தக வாஸின்யை ஸ்வாஹா
அதோ மாம் ஸதாவது
ஓம் க்ரந்த பீஜ ஸ்வரூபாயை ஸ்வாஹா
மாம் ஸர்வதோவது.

வாகீச்வரி மந்திரம்

கண்வருஷி : விராட் சந்த : வாகீச்வரி தேவதா
ஐம்-பீஜம் ஸ்வாஹா சக்தி
மாத்ருகாவதங்கானி
மந்த்பதை : பஞ்ச பிஸ்ஸம்ஸ்தைச வா
குர்யாதங்கானி

தியானம்

அமலகமலஸம்ஸ்தா லேகநீ புஸ்தகோத்யத்
கரயுகள ஸரோஜா குந்த மந்தார ஹார
த்ருதஸஸதர கண்டோல்லாஸி கோடீர சூடா
பவது பவபயானாம் பஞ்சனீ பாரதீ வ
மந்த்ர : வத-வத வாக்வாதினீ ஸ்வாஹா
கண்வருஷி : வாகீச்வரி தேவதா
ஐம்-பீஜம் ஹ்ரீம் சக்தி : ஓம் கீலகம்
ஐம்-ஆம் : ளாம்-ஈம் : இதி கரஷடங்க, ஹ்ருதயாதி
ந்யாஸச்ச

தியானம்

ஹம்ஸாரூட பஸிதஹரஹாரேந்து குந்தாவ தாதா
வாணீ மந்தஸ்மிதயுதமுகீ மௌலி பத்தேந்து ரேகா
வித்யா வீணாம் ருதமய கடாக்ஷஸ்ரகா தீப்த ஹஸ்தா
ஸுப்ராப்ஜஸ்தா பவதமிமத ப்ராப்தயே பாரதீ ஸ்யாத்
மந்த்ர : ஓம்-ஹ்ரீம்-ஐம் ஸரஸ்வத்தைய நம: ஹ்ரீம்-ஓம்

ருத்ர வாகீச்வரி மந்திரம் (யந்த்ராந்தரம்)

த்ரிவிக்ரமருஷி : காயத்ரீ சந்த : ருத்ர வாகீச்வரீ தேவதா
வாம்-பீஜம் ஸ்வாஹா சக்தி :
1. ஸாம் ஸர்வஜ்ஞ
2. ஸீம் அம்ருதம் தேஜோமாலினி நித்ய த்ருப்தி
3. ஸூம்-வதவேதினி அநாதிபோத
4. ஸைம்-வஜ்ரிணே வந்ரதராய ஸ்வந்த்ர
5. ஸெளம்-நித்ய மலுப்த சக்திஸ ஹஜே த்ரிரூபிணே
6. ஸ: அனந்த சக்தி (ஓம் ஸ்லீம் பஸுஹும் பட்
பாஸுபதாஸ்த்ராய ஹஸஸ்ராக்ஷõய
இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச

தியானம்

ஸுப்ராபாம் த்ரீக்ஷணாம் தோர்பிப்ரதீம் பலபுஸ்தகே
வராபயே ஸர்வபூஷாம் ருத்ரவாகீச்வரிம் பஜே
மந்த்ர : ஓம்-வாம்-ஹ்ரீம்-ஸ்ப்யோம்-ஹயைம் ஸ்வாஹா

விஷ்ணு வாகீச்வரி மந்திரம்

கச்யப ருஷி : காயத்ரீ சந்த : விஷ்ணு வாகீச்வரி தேவதா
ஸ்ப்யோம்-பீஜம் ஸ்ரீம்-சக்தி :
பீஜேனேவ ஷடங் கானி
தியானம்
ஹேமாபாம் பிப்ரதீம் தோர்பி
பலபுஸ்தத்கும்பகான்
அபயம் ஸர்வ பூஷாட்யாம்
விஷ்ணு வாகீச்வரீம் பஜே
மந்த்ர : ஓம்-ஸ்ரீம்-ஸ்ப்யோம்-ஹ்ரீம்-நம

நகுலீ மந்திரம்

நகுலீ சரஸ்வதி மந்த்ரஸ்ய ப்ரஹ்மாருஷி :
காயத்ரீ சந்த :
நகுலீ சரஸ்வதி தேவதா
விகாஸபாஜி ஹ்ருத்பத்மே
ஸ்திதாமுல்லாஸதாயினீம்
பரவாக் ஸ்தம்பினீம் நித்யாம் ஸ்மராமி நகுலீம் ஸதா
மந்த்ர : ஐம்-ஓஷ்டாபிதானா நகுலீ தந்தை: ப்ரிவ்தாபவி:
க்லீம்-ஸர்வஸ்யை வாச ஈசானா சாரு மாமிஹ வாதயேத்
ஸம்ர : ஸெள : க்லீம்-ஐம்

பரா ஸரஸ்வதீ மந்திரம்

ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த :
பரா ஸரஸ்வதி தேவதா
ஸெள : கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச
தியானம்
அகலங்கஸஸாங்காபா த்ரயக்ஷõ சந்த்ர கலாவதி
முத்ரா புஸ்தலஸத் வாஹா பாது பரமா கலா
மந்த்ர : ஸெள

பாலா சரஸ்வதி

ப்ரஹ்மாருஷி : காயத்ரீ சந்த : பாலா சரஸ்வதி தேவதா
ஐம்-பீஜம் ஸெள : சக்தி : க்லீம்-கீலகம்
இதி கரஷடங்க, ஹ்ருதயாதி ந்யாஸச்ச-
தியானம்
அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
வித்ருத ஜபபடீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
இதரகரவராட்யா புல்ல கல்ஹாரஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண ரூபா
தியானந்தரம்
பாலாஸ்ருணீ புஸ்தக பாஸ ஹஸ்தாம் பாலாம்பிகாம்
ஸ்ரீலிதாம் குமாரீம்
குமார காமேச் வரகேளி லோலாம் நமாமி
கௌரீம் நவ வர் ஷதேஸ்யாம்
மந்த்ர : ஐம் க்லீம் ஸெள : ஸெள : க்லீம் ஐம்

நகுலீ சரஸ்வதி

அஸ்ய ஸ்ரீ நகுலீ சரஸ்வதி மஹா மந்த்ரஸ்ய
விச்வாமித்ர ருஷி : த்ரிஷ்டுப் சந்த :
நகுலீ சரஸ்வதீ தேவதா
ஸாரஸ்வதே மம பாதஜயே வா விநியோக :
ஐம் க்லீம் ஸெள ஸெள க்லீம் ஐம்
என்று கரஷடங்க ஸ்ருதயாதி ந்யாஸம்
பூர்ப்பு வஸ்ஸுவ ரோமிதி திக் பந்த:

தியானம்

ஓஷ்டாப்யாம் பிஹிதைச்ச பங்க்தி நிஸிதை :
தந்தைர்கனைஸ் ஸம்வ்ருதா
தீக்ஷணா வஜ்ரவதத்ர ஸர்வஜகதாம் யாஸ்வாமினீ ஸந்ததம்
ஸாமாம் சாரு கரோது வாதநிபுணம் ஸர்வத்ர ஸா வாக்ரஸா
யேன ஸ்யாமஹமேவ ஸர்வஜகதா மத்யர்த மக்ரேஸர :
தாக்ஷ?ர்யாரூடா மஹிதலளிதம் தாலுஜன்மா விஸங்கீ
சஞ்சத் வீணா கலரவஸுகீ சக்ர ஸங்காஸி பாணி
ராறோத்தும்ஸா மனஸி நகுலீ ராஜது ஸ்யாமளா யா
ப்ரத்யங்கத்வம் பரிகதவதீ ப்ரத்யஹம் மாமகீனே
லம் இத்யாதி பஞ்சபூஜா
மந்த்ர: ஐம் ஓஷ்டாபிதானா நகுலீ க்லீம் தந்தை :
பரிவ்ருதா பவி : ஸெள : ஸரவஸ்யை வாச
ஈஸான சாரு
மாமிக வாதயேத் வத வத
வாக்வாதினீ ஸ்வாஹா
ஹ்ருதயாதி ந்யாஸம் பூர்ப்புவஸ்ஸு
ரோமிதி திக்விமோக
த்யானம் லமித்யாதி புன : பூஜா பூஜா
ஸமர்பணம்

தாரண சரஸ்வதி மந்திரம்

அஸ்ய ஸ்ரீதாரண ஸரஸ்வதீ மஹா மந்த்ரஸ்ய
அநிராகரண ருஷி : அனுஷ்டுப் சந்த : தாரண
ஸரஸ்வதீ தேவதா
தியானம்
ஸுராஸுரா ஸேவித பங்கஜா கரே விரோஜத் கமனீய புஸ்தகா
விரஞ்சி பத்னீ கமலாஸன ஸ்திதா ஸரஸ்வதீ
ந்ருத்யது வாசி மே ஸதா
ஓம் நமோ ப்ரஹ்மனே தாரணம் மே அஸ்த்வனிரா
கரணம் மே அஸ்வத்வனிரா கரணம் தாரயிதா
பூபாஸம் கர்ணயோ: ச்ருதம் மாச்யோட்வம்
மமாமுஷ்ய ஓம் இதி மந்த்ர :

முக்யா சரஸ்வதி மந்திரம்

கண்வருஷி : விராட் சந்த : முக்யா ஸரஸ்வதீ தேவதா
வாகிதி பீஜம் : பர இதி சக்தி :
1. ஐம் வாசஸ்பதே  2. அம்ருத
3. ப்லுவ: 4. ப்லு :
5. ஐம் வாசஸ்பதே அம்ருத
6. ப்லுவ : ப்லு : இதி ஷடங்கானி

தியானம்

ஆஸினா கமலே கரே ஜபவடீம் பத்மத்வயம்
புஸ்தகம் பிப்ராணா தருணேந்து காப்ரமகுடா
முகதேந்து குந்தப்ரபா
பாலீன் மீலிதலோசனா குசபரக்லாந்தா
பவதூபூதயே பூயாத் வாகதி தேவதா
முனிகணேனா ஸேவ்யமானாஸனிஸம்
மந்த்ர : ஐம் வாசஸ்பதே அம்ருதப்லுவ: ப்லு:

வாணீ சரஸ்வதி மந்திரம்

கண்வருஷி : அனுஷ்டுப் சந்த :
வாணீ ஸரஸ்வதீ தேவதா
ஐம் பீஜம் ஹ்ரீம் சக்தி : வித்யார்தே விநியோக :
1. ஐம் ஹ்ராம் 2. ஐம் ஹ்ரீம் 3. ஐம் ஹ்ரூம்
4. ஐம் ஹ்ரைம் 5. ஐம் ஹ்ரௌம்
6. ஐம் ஹ்ர :  இதிஷடங்காளி

தியானம்

ஹம்ஸாரூடா ஹாபப்திதஹாரேந்து குந்தாவ தாதா
வாணீ மந்தஸ்மிதயுதமுகீ மௌலி
பத்தேந்து ரேகா
வித்யா வீணாம் ருதமய கடாக்ஷஸ்ரகா
தீப்த் ஹஸ்தா
ஸூப்ராப்ஜஸ்தா பவதமிமத ப்ராப்தயே
பாரதீ ஸ்யாத்
மந்த்ர: ஓம் ஹ்ரீம் க்லௌம் ஸரஸ்வத்யை நம:
ஹ்ரீம் ஓம்

நீல சரஸ்வதீ ஸ்தோத்திரம்

கோரரூபே மஹாராவே ஸர்வ சத்ரு பயங்கரி
பக்தேப்யோ வரதே தேவி த்ராஹி மாம் சரணாகதம்
ஸுராஸுரார்ச்சிதே தேவி ஸித்த கந்தர்வ ஸேவிதே
ஜாட்ய பாபஹரே தேவி த்ராஹி மாம் சரணாகதம்
ஜடா ஜூட ஸமாயுக்தே லோல ஜிஹ்வாந்த காரிணீ
த்ருத பத்திகரே தேவி
ஸெளம்ய க்ரோததரே ரூபே சண்டரூபே நமோஸ்துதே
ஸ்ருஸ்ரூபே நமஸ் துப்யம்
ஜடானாம் ஜடதாம் ஹந்தி பக்தானாம் பக்தவத்ஸலா
மூடதாம் ஹரமே தேவி
ஹ்ரூம் ஸ்ரூம் கரமயே தேவி பலிஹோமப்ரியே நம:
உக்ரதாரே நமோ நித்யம்
புத்திம் தேஹி யசோ தேஹி கவித்யம் தேஹி தேஹிமே
மூடத்வம் ச ஹரேர் தேஹி
இந்த்ராதி விலஸத் வந்த்வ வந்திதே கருணா மயீ
தாரே தாரதி நாதாஸ்யே
அஷ்டம்யாம் சதுர்தஸ்யம் நவம்யாம் ய: படேந்நர
ஷ்ண்மாஸ்தை: ஸித்தி மாப்னோதி நாத்ரகார்யா விசாரனா
மோக்ஷõர்தீ லபதே மோக்ஷம் தனார்தீ லபதே தனம்
வித்யார்தீ லபதே வித்யாம் தர்க்க வ்யாகரனாதிகம்
இதம் ஸ்தோத்ரம் படேத்யஸ்து ஸததம் சர்த்தயான் வித:
தஸ்ய ஸத்ரு: க்ஷயம் யாதி மஹாப்ரஜ்ஞா ப்ரஜாயதே
பீடாயாம் வாபி ஸங்க்ராமே ஜாட்யே தானே ததாபயே
ய இதம் படதி ஸ்தோத்திர சுபம் தஸ்ய ந ஸம்ஸய:
இதி ப்ரணயே ஸ்துத்வாச யோநிமுத்ராம் ப்ரதர்ஸயேத்
இதி நீல ஸரஸ்வதி ஸ்தோத்ரம்.

சரஸ்வதி அஷ்டகம்

ஸதாநீக உவாச
மகாமதே மஹா ப்ராஜ்ஞ ஸர்வ
சாஸ்த்ர விசாரதா
அக்ஷ?ண கர்ம பந்தஸஸ்து புரு÷ஷா
த்விஜ ஸத்தம
மாணே யஜ்ஜ பேஜ்ஜப்யம்
யஞ்ச பாவ மனுஷ்மரண்
பரமபத மவாப் னோதி தன்மே
ப்ருஹீ மகாமுனே
சௌநக உவாச
இதமேவ மஹா ராஜா பிருஷ்டம்
வாம்ஸ்தே பிதாமஹ:
பீஷ்மம் தர்ம விதாம் ஸ்ரேஷ்டம்
தர்ம புத்ரோ யுதிஷ்டிர:
யுதிஷ்ட்ர உவாச
பிதாமஹ மகா பிராஜ்ஞ
ப்ருஹஸ்பதி சாஸ்திர விசாரதா
ப்ருஹஸ்பதி ஸ்துதா தேவி
வாகீசாய மகாத்மனே
ஆத்மானம் தர்ச யாமஸா
ஸூர்ய கோடி ஸமப்ரபாம்
ஸரஸ்வதி உவாச
வரம் விருணீஷ்வ பத்ரந்தே
யத்தே மனஸி வர்த்ததே
பிருஹஸ்பதி உவாச
யதிமே வரதா தேவி
திவ்ய ஜ்ஞானம் பிரயச்சமே
தேவி உவாச
ஹந்ததே நிர்மலம் ஞானம்
குமதி த்வம்ஸ காரம்
ஸ்தோதத் ரேணா நேந யே பக்தயா
மாம் ஸ்துவன் தி மநீஷிண:
பிருஹஸ்பதி உவாச
லபதே பரமம் ஜ்ஞானம்
யத் ஸுரைரபி துர்லபம்
பிராப்னோதி புரு÷ஷா நித்யம்
மஹா மாயா ப்ரஸாதத:
சரஸ்வதி உவாச
திரிஸந்நித்யம் பிரயதோ நித்யம்
படே அஷ்டக முத்தமம்
தஸ்ய கண்டே ஸதாவாஸம்
கரிஷ்யாமி நஸம்ஸய:
ப்ரஹ்ம ஸ்வரூபா பரமா
ஜ்யோதி ரூபா ஸநாதரீ
ஸர்வ வித்யாதி தேவி யா தஸ்யை
வாண்யை நமோ நம:
விஸர்க்க பிந்து மாத்ராஸு
யத்திஷ்டான மே வச
அதிஷ்டாத்ரீ ச யா தேவி
தஸ்யை நித்யை நமோ நம:
வ்யாக்யா ஸ்வரூபா ஸா தேவீ
வ்யாக்யா திஷ்டாத்ரு ரூபிணீ
ய யா விநா பிரஸங்க யாவாந்
ஸங்க்யரம் கர்த்தும் ந சக்யதே
கால ஸங்க்யா ஸ்வரூபாயா
தஸ்யை தேவ்யை நமோ நம:
ஸ்மிருதி சக்திர் ஞான சக்தி:
புத்தி சக்தி ஸ்வரூபிணி
பிரதிபா கல்பனா சக்தி யா ச
தஸ்யை நமோ நம:
க்ருபாம் குரு ஜகன் மாதா
மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸ்மிருதிம் வித்யாம்
சக்திம் சிஷ்ய ப்ரபோதினிம்
யாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீ
ஸ்தோத்திரம் ஏதத் துய: படேத்
ஸ கவீந்தரோ மஹா வாக மீ
பிருஹஸ்பதி ஸமோ பவேத்
ஸ பண்டித ஸ்ச மேதாவீ
ஸுகவ்நித்ரோ பவேத் த்ருவம்

சரஸ்வதி ஸூக்தம்

ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜிநீலதீ
தீநாமவித்ர்யவது

சரஸ்வதி தேவி அன்னம் முதலான பொருள்களையும் ஸூக்ஷ?ம புத்தியின் வாயிலாக அறியத்தக்க சகல வித்தைகளையும் நமக்குக் கொடுத்து, நம் பூஜாதிகளால் திருப்தியடைந்து நம்மை நன்றாகக் காப்பாற்ற வேண்டும்

ஆநோ திவோ ப்ருஹத: பர்வதாதா
ஸரஸ்வதீ யஜதா கந்து யஜ்ஞம்
ஹவம் தேவீ ஜுஜுஷாணா க்ருதாசீ
சக்மாம் நோ வாசமுசதீ ச்ருணோது

அனைவரும் வழிபடத் தகுந்த சரஸ்வதி தேவி மூன்றாவது உலகத்திலோ மேரு மலையிலோ வசித்தாலும் எங்களுடைய வழிபாட்டை ஏற்றுக் கொள்வதற்காக,சுகத்தைக் கொடுக்கக் கூடிய வேதரூபமான ஸ்தோத்திர வார்த்தைகளையும் அழைப்பையும் விரும்பியவளாக, இளகிய தன்மையுடன் அவசியம் வந்து, பூஜையைப் பெற்று எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

அகஸ்தியர் அருளிய சரஸ்வதி ஸ்தோத்திரம்

யா குந்தேந்து துஷார ஹாரதவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா
யாச்வேதபத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவைஸ் ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
நிச்சேஷ ஜாட்யாபஹா
தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பி:
ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா
ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச
சுகம் புஸ்தகஞ் சாபரேண
பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா
பாஸ மானா(அ) ஸமானா
ஸாமே வாக்தேவதேயம் நிவஸது
வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா
ஸூராஸூரஸேவித பாதபங்கஜா
கரே விராஜத் கமநீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா
ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா
தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா
கனஸ்தனீ கமலவிலோல லோசனா
மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:
சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:
நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:
நவித்யாதரே விசாலாக்ஷ?யை சுத்தஜ்ஞானே நமோ நம:
சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ?மரூபே நமோ நம:
சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:
முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:
மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:
மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:
சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:
வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:
குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:
ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:
ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:
யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:
திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:
அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:
ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:
பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:
பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ
மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ?ம்யை நமோ நம:
ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:
கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:
கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:

சரஸ்வதி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம்

சரஸ்வதி மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீ ப்ரதா பத்மநிலையா பத்மாழீ பத்மவகத்ரகா
சிவானுஜா புஸ்தகப்பிருத் ஞானமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மகாபாதக நாசினி
மகாஸ்ரயா மாலீநீச மகாபோகா மகாயுஜா
மகாபாகா மகோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மகாகாளீ மகாபாஸா மஹாகாரா மஹாங்குசா
பீதாச விமலா விஸ்வா வித்யுன் மாலாசா வைஷ்ணவி
சந்திரிகா சந்திர வதனா சந்திரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுர ஸாதேவி திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மகா பத்ரா மகா பலா
போகதா பாரதீபாமா கோவிந்தா கோமதீ சிவா
ஜடிலா வந்திய வாஸாச விந்தியாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவீ பிராஹ்மீ
பிரஹ்மஞ்ஞானைக ஸாதநா
ஸெளதாமினி ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாஸினி ஸுநாஸாச விநித்ரா பத்ம லோசநா
வித்யாரூபா விசாலாக்ஷ? ப்ரம்மஜாயா மஹாப்லா
திரயீமூர்த்திஸ் திரிகாலஞ்ஜா த்ரிகுணா சாஸ்திர ரூபிணி
சும்பாசுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்த பீஜ நிஹந்த் ரீ ச சாமுண்டா சாம்பிகா ததா
முண்டகாய ப்ரஹரணா தூம்ர லோசனா மர்த்தனா
ஸர்வ தேதூ ஸ்ததா ஸெளம்யா ஸுராஸு நமஸ்கிருதா
காளராத்ரீ கலாதாரா ரூப ஸெளபாக்ய தாயினி
வாக்தே வீச வரா ரோஹா வாரிஜாஸனா
சித்ராம்பரா சித்ர கந்த்தா சித்ரா மால்ய விபூஷீதா
காந்தா காம ப்ரதா வந்தியா வித்யாதரா ஸுபூஜிதா
ஸ்வேதா நநா நீலபுஜா சதுர் வர்க்க பலப்ரதா
சதுரா நந ஸாம்ராஜ்யா ரக்த மத்யா நிரஜ்ஜநா
ஹம்ஸாஸன நீல ஜங்கா பிரம்ம விஷ்ணு சிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதி தேவ்யா நாம் நாமாஷ் டோத்தரம் சதம்.

ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க

1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்விஷா ஜஹி.

2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.

3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி

பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்

வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.

ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம

இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெற வேண்டும்.

திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.

நாமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:

இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு மணம் கைகூடும்.

துளஸீமே சிரப்பது
பலம் பங்கஜ தாரிணி
த்ரி செனமே பத்ம நயனா
ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
கிறாணம் சுகந்தா மேபாது
முகஞ்ச சுமுகீ மம
ஸகந்தென கல்ஹாரிணீ பாது
ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
புஷ்பதா மத்மயம் பாது
நாபிம் ஸெளபாக்ய தாயிணி
கடிதம் குண்டலனி பாது
ஊரு வாத வந்திதா
ஜெனனீ ஜானுனீ பாது
ஐஸ்கே சகல வந்திதம்
நாராயணப் ப்ரியே பாது
ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
ஸங்கடே விடிமே துர்கே
பயே வாதே மஹா ஹவே
ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
துளஸீ ஸர்வத ஸதா
இதீதம் பரமம் குஹ்யம்
துளஸ்யா கவசம் முதா
துளஸீ கானனே திஷ்டன்
ஆஸீ னோவா ஜபேத்யதி
ஸர்வவான் காமான் அவாப் னோத
விஷ்ணு சாயுஜ்ய முச்யதி

எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

நல்ல வரன் அமைய மந்திரம்

அபிராமி அந்தாதி பதிகம்
அதிசயமான வடிவுடை
யாள் அரவிந்த மெல்லாம்
துதிசய ஆனன சுந்தர
வல்லி துணை இரதி
பதிசய மானது அபசய
மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோவாம
பாகத்தை வவ்வியதே

தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.
அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில்
அமர்ந்தருளினாள்.

திருமணம் நிறைவேற மந்திரம்

திங்கட்பகவின்மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.

பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்க

சில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.

1. ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய
ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே
விதிசதமகாத்யா திவிஷத:

2. கராளம் பத் க்ஷவேளம்
கபளித வத: கால கலநா
நசம்போ: தந்மூலம்தவ
ஜனநி தாடங்க மஹிமா

(அமிர்தத்தைச் சாப்பிட்டும் தேவர்கள் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். உன்னுடைய தாடங்க மகிமையால்தான் விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவில்லை.

சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரம்

அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.

ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம்  (ஸ்ரீ)
வாதபீதடே வாமபாகே - வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான்  (ஸ்ரீ)
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம்  (ஸ்ரீ)
ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா  (ஸ்ரீ)
கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம்  (ஸ்ரீ)
ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம்  (ஸ்ரீ)
ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்:  (ஸ்ரீ)

தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ஸ்லோகம்

இது சாவித்திரிஸ்ரீ, சாவித்திரி தேவியை பூஜித்து நமஸ்கரித்து பிரார்த்தித்த ஸ்லோகம். காலையில் தினமும் ஜெபிக்க வேண்டியது. கவனமாகப் படித்து பிழையி
ல்லாமல் சொல்லவும்.
ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே

தீர்க்க சௌமாங்கல்யம் பெற

ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.
ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;
உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.

மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி

துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட
வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி
யாவது அறிந்தனமே.

அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.

இல்வாழ்க்கையில் இன்பம் பெற

ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.

ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.

நல்ல குழந்தைகளாக வளர

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே

மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள்
தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே!

ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே

அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு  ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !

குழந்தைப் பேறு உண்டாக

தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே

திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.

கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ

வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே

திருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டா?

கல்யாண சித்தி பெற மந்திரம்

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும். தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.

மந்திரம்

ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.

இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.

அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா

மந்திரம்

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
ஹ்ருதயாதி-ந்யாஸ
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்

நரசிம்ம மந்திரம்

அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
உக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய
ர÷க்ஷõகணம்: ஜாநுந்யஸ்த கராம்புஜம்
த்ரிநயனம் ரத்நோல்லஸத் பூஷணம்
பாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
வக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்
லம்-பிருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
அம்-ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம்-வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
வம்-அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம்-ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமீ

மூலமந்திரம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம்! ந்ருஸிம்மம் பீஷணம்
பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்

துக்கம் விலக மந்திரம்

துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்

துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம்.

சௌபாக்கிய லட்சுமி

ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.

நன்றி: வன்னிவிநாயகர் புத்தக நிலையம், மதுரை.